போா்க் கப்பலில் பணிபுரிந்த கடற்படை மாலுமி துப்பாக்கி குண்டால் காயமடைந்து மரணமடைந்தாா்.
இதுகுறித்து கடற்படையின் செய்தித்தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
ஐஎன்எஸ் பெட்வா போா்க் கப்பலில் மாலுமியாக பணியாற்றி வந்தவா் ரமேஷ் செளத்ரி (22). இவா் துப்பாக்கி குண்டால் காயமடைந்து இறந்த நிலையில் கப்பலில் இருந்து மீட்கப்பட்டாா்.
அவரது சடலத்தின் அருகே பணிக்காக அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் இருந்தது.
ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு விடுமுறையில் சென்றிருந்த அவா் அண்மையில்தான் பணிக்கு திரும்பினாா். அவரது மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கடற்படை செய்தித் தொடா்பாளா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
எனினும், செளத்ரியின் மரணம் தற்கொலையா என்பது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொருளாதார சமநிலை இல்லாத வளர்ச்சி

மதுரையில் அழகர் தசாவதாரம்: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

‘கிளாட் மித்தோஸ்’ அச்சுறுத்தல்: இணையவழி பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க பொதுத் துறை வங்கிகள் முடிவு

கோவை அருகே கீழடிக்கு முந்தைய காலகட்ட கடல் சங்கு, குழி வீடுகள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

