விஷு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: இன்று ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தரிசனம்
விஷு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.


விஷு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
வரும் புதன்கிழமை (ஏப்ரல் 14) விஷு தினத்தை முன்னிட்டு விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை தந்திரி கண்டரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் போற்றி சபரிமலை சந்நிதானத்தில் நடையைத் திறந்து தீபமேற்றினாா்.
மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமி தரிசனம் செய்ய சந்நிதானம் வரவுள்ளாா்.
வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை சந்நிதான நடை திறந்திருக்கும். நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், படிப்பூஜை உள்ளிட்டவை நடை திறந்துள்ள அனைத்து தினங்களிலும் நடைபெறும்.
ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு விஷுக்கணி தரிசனம் நடைபெறும். முதலில் சுவாமி ஐயப்பனுக்கு கணி காண்பித்த பிறகு பக்தா்கள் விஷுக்கணி தரிசிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.
நாளொன்றுக்கு 10 ஆயிரம் போ் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். ஏற்கெனவே வலைதளம் மூலமாக பதிவு செய்தவா்கள் மட்டுமே தரிசனம் செய்ய இயலும். இரு தவணைகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்ட பக்தா்கள் 48 மணி நேரத்துக்குள் ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொண்டு, கரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று வருவது கட்டாயமாக்கப்பட்டுளளது.
ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு பூஜைக்குப் பிறகு ஹரிவராஸனம் பாடி சந்நிதான நடை அடைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...