மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன: பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிப்பதாக பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன: பிரதமர் மோடி
Updated On :3 ஆகஸ்ட் 2021, 6:45 am

ANI

நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் அவமதிப்பதாக பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத்துறை பிரஹலத் ஜோஷி கூறியதாவது,

நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கையிலிருந்த காகிதை கிழிந்தெறிந்துவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருப்பது, உறுப்பினரை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பதாகும் என கூட்டத்தில் பிரதமர் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 10 நாள்களாக முழக்கங்கள் எழுப்பி கூட்டத்தை நடத்தவிடாமல் செய்வது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.