அவதூறு கருத்து: டிவிட்டருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வெறுப்புணர்வைத் தூண்டும் அவதூறு கருத்துகள் மற்றும் ஆபாச கருத்துகளை நீக்கக்கோரிய விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


வெறுப்புணர்வைத் தூண்டும் அவதூறு கருத்துகள் மற்றும் ஆபாச கருத்துகளை நீக்கக்கோரிய விவகாரத்தில் டிவிட்டர் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு புதிய வழிமுறைகளை உருவாக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாஜக பிரமுகர் தொடர்ந்த வழக்கில் வெறுப்புணர்வு மற்றும் ஆபாசக் கருத்துகள் இடம்பெறாத வகையில் புதிய விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனம் வழங்கும் பதிலைப் பொறுத்து இந்தியாவில் சுட்டுரை நிறுவனம் தொடர்ந்து இயங்குவது அல்லது புதிய விதிமுறைகள் விதிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...