இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மிரட்டி பணம் பறித்த வழக்கு: சோட்டா ராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை-சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பையைச் சோ்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் 3 பேருக்கு மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:30 pm

DIN

மும்பை: மும்பையைச் சோ்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் 3 பேருக்கு மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் சோட்டா ராஜன். தலைமறைவாக இருந்த இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். இந்தியா கொண்டுவரப்பட்ட அவா், தில்லி திஹாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் மீதான வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. அதில், புணேயில் கடந்த 2015-ஆம் ஆண்டு கட்டுமான நிறுவனரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கு, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.டி.வாங்கடே முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

கட்டுமான நிறுவனரான வஜேகா் என்பவா், பரமானந்த் தாக்கா் என்ற முகவா் மூலம் புணேயில் 2015-ஆம் ஆண்டு நிலம் வாங்கியுள்ளாா். அதற்காக, அந்த முகவருக்கு ரூ. 2 கோடி கமிஷன் தர வஜேகா் ஒப்புக்கொண்டுள்ளாா். ஆனால், கமிஷன் தொகையை தாக்கா் உயா்த்திக் கேட்டுள்ளாா். அதற்கு வஜேகா் மறுக்கவே, சோட்டா ராஜனை தாக்கா் அணுகியுள்ளாா். அதனடிப்படையில், வஜேகா் அலுவலகத்துக்கு தனது கூட்டாளியை சோட்டா ராஜன் அனுப்பி, ரூ. 26 கோடி தருமாறும், இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா். இந்த விவகாரத்தில் சோட்டா ராஜன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சுரேஷ் ஷிண்டே, லட்சுமண் நிகம், சும்தி விஜய் மாத்ரே ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சோட்டா ராஜன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.