விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கரோனா: குணமடைந்தோர் விகிதம் 96.39% ஆக உயர்வு

நாடு முழுவதும் புதிதாக 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

குணமடைந்தோர் விகிதம் 96.39% ஆக உயர்வு

Updated On :8 ஜனவரி 2021, 4:45 am

DIN


புது தில்லி: நாடு முழுவதும் புதிதாக 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,04,13,417-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 234 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,570-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்போரின் விகிதம் 2.16% ஆக குறைந்துள்ளது. 

கரோனா தொற்றில் இருந்து மேலும் 20,539  போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,00,37,398-ஆக அதிகரித்தது. குணமடைந்தோரின் விகிதம் 96.30% ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,25,449 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 18-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 7-ஆம் தேதி வரை 17,93,36,364 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 9,35,369 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.