ஜூலை மாதம் வந்துவிட்டது.. தடுப்பூசி எங்கே? - ராகுல் காந்தி கேள்வி; அமைச்சர் பதில்!
ஜூலை மாதம் வந்துவிட்டது, கரோனா தடுப்பூசி இன்னும் வரவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


ஜூலை மாதம் வந்துவிட்டது, கரோனா தடுப்பூசி இன்னும் வரவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் தற்போது 35 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
ஜூலை மாதம் வந்துவிட்டது, கரோனா தடுப்பூசி இன்னும் வரவில்லை, தடுப்பூசி எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,
ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் நேற்றுதான் வெளியிட்டேன். ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை? அவர் அந்த செய்தியை பிடிக்கவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும்' என்று பதில் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...