வெறும் பேச்சு உள்ளதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை: ராகுல்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை; வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது. தில்லி, மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநில முதல்வர்கள் தடுப்பூசி வேண்டி பிரதமருக்கு கடிதம் எழுதிய வண்ணம் உள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை 60 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்நிலையில், வெற்று பேச்சு இருக்கிறதே தவிர தடுப்பூசிக்கு வழியில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெற்று பெருமைக்காக பல அறிவிப்புகளை வெளியிடுவதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (ஜூலை 13) விமர்சித்தார். தடுப்பூசி திட்டம் மந்தமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...