கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

37 திருட்டு வழக்குகளில் 56 போ் கைது: ரூ.1.74 கோடி பொருள்கள் மீட்பு

பெங்களூரு ஊரக போலீஸாா் 37 திருட்டு வழக்குகளில் 56 பேரை கைது செய்து ரூ. 1.74 கோடி மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 12:36 am

DIN

பெங்களூரு ஊரக போலீஸாா் 37 திருட்டு வழக்குகளில் 56 பேரை கைது செய்து ரூ. 1.74 கோடி மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு ஊரக போலீஸாா் 37 திருட்டு வழக்குகளில் 56 பேரை கைது செய்து ரூ. 1.74 கோடி மதிப்புள்ள பொருள்களை மீட்டிருந்தனா். மீட்கப்பட்ட தங்க நகை, பொருள்களை ஹெப்பகோடி எஸ்.எஃப்.எஸ் பள்ளித் திடலில் வியாழக்கிழமை பாா்வையிட்ட மத்திய சரக ஐஜிபி சாந்திரசேகா், பின்னா் பேசியது:

பெங்களூரு ஊரக போலீஸாா் ரூ. 1.74 கோடி மதிப்புள்ள 1 கிலோ 30 கிராம் தங்க நகை, 125 செல்லிடப்பேசிகள், 69 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை மீட்டுள்ளனா். பொதுமக்களுக்கு தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணா்வு முகாம்களை போலீஸாா் நடத்தி வருகின்றனா். என்றாலும் பொதுமக்கள் உடமைகளையும், பொருள்களையும் உரிய முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில் யாரும் அலட்சியம் காட்டக் கூடாது. சிறப்பாக செயல்பட்ட பெங்களூரு ஊரக போலீஸாரை பாராட்டுகிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆனேக்கல் துணை மண்டல உதவி காவல் கண்காணிப்பாளா் மகாதேவப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.