சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கான விசா காலம் ஆக. 31 வரை நீட்டிப்பு

கரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விசா காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கான விசா காலம் ஆக. 31 வரை நீட்டிப்பு

Updated On :28 ஜனவரி 2024, 1:52 am IST


புது தில்லி: கரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாமல், நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கான விசா காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் விமான சேவை இயக்கப்படாததால், அதற்கு முன்பு விசா பெற்று இந்திய நாட்டுக்குள் வந்தவர்கள், இங்கேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற வெளிநாட்டினர் சந்திக்கும் சிக்கல்களை சரிசெய்ய வசதியாக, கடந்த 2020 ஜூன் 29ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், ஜூன் 30, 2020 க்குப் பிறகு காலாவதியாகும் அத்தகைய வெளிநாட்டினரின் இந்திய விசா அல்லது தங்குவதற்கான காலம் சாதாரண சர்வதேச விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிய நாளிலிருந்து கூடுதலாக 30 நாள்கள் வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், வெளிநாட்டினர் தங்களது விசா அல்லது தங்குவதற்கான காலத்தை மாதந்தோறும் நீட்டித்துக் கொள்ள விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டு, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் விசா அல்லது தங்குவதற்கான கால அனுமதியை 2021 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாட்டினர் எந்த விண்ணப்பத்தையும் அனுப்ப வேண்டியதில்லை என்றும், வெளிநாட்டுக்குத் திரும்பும் போது எந்த கட்டணமோ, அபராதமோ செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.