இந்திய மக்களுக்கு ட்விட்டர் நிறுவனம் ரூ. 110 கோடி நிதியுதவி

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி(15 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக்
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக்

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி(15 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. 

இதனிடையே, கரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன. 

அந்தவகையில் கரோனா நிவாரண நிதியாக ட்விட்டர் நிறுவனம் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 110 கோடி ஆகும். 

இந்த தொகை 'கேர்'(CARE), 'எய்டு இந்தியா'(Aid India), 'சேவா இன்டர்நேஷனல் அமெரிக்கா'(Sewa International USA) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 10 மில்லியன் டாலர்(73.47 கோடி ரூபாய்), 2.5 மில்லியன் டாலர்(18.36 கோடி ரூபாய்), 2.5 மில்லியன் டாலர்(18.36 கோடி ரூபாய்) என மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் பேட்ரிக் ட்வீட் செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com