பிரதமர் மோடியுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தில்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது, பிரதமருக்கு திருக்குறள் புத்தகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரிசாக வழங்கினார்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன், தற்போது மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு, பால் பண்ணை, செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சராக பதவி வகிக்கிறாா்.
இவர் எம்.பி. பதவி வகிக்காத நிலையில், மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டனா். அமைச்சராக தொடர வேண்டுமெனில் எம்.பி. ஆக வேண்டிய கட்டாயம் நிலவியது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தோ்தலில் மத்திய பிரதேசத்திலிருந்து எல்.முருகன் எம்.பி. ஆகப் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை எல்.முருகனுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...