தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 39 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,556 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 66,278 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி: உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு
மேலும் 18 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதுவரை மொத்தம் 14,13,071 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,085 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 400 பேர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...