கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தில்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தற்காலிக தடை

தில்லி ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்

Updated On :20 ஏப்ரல் 2022, 5:55 am

DIN

தில்லி ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை உடனடியாக நிறுத்த உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வடக்கு தில்லி மாநகராட்சித் தரப்பில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. அதில், ஒருபகுதியாக ஜஹாங்கீா்புரியிலும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஜஹாங்கீா்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 9 போலீஸாரும், ஒரு குடிமகனும் காயமடைந்தனா். தொடர்ந்து, அப்பகுதியை சுற்றிலும் 1,250 சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜஹாங்கீா்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

ஜவாங்கீர்புரி பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கருத்தில் கொண்டு ஒரு தரப்பினரின் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தற்போது இருக்கும் நிலையே அங்கு தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் விசாரணை நாளை காலை தொடங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.