துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் தான் பதிலடி: ஆளுநர் ரவி 

துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 
துப்பாக்கி எடுப்போருக்கு துப்பாக்கியால் தான் பதிலடி: ஆளுநர் ரவி 
Published on
Updated on
1 min read


துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கியால் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

கேரளம் மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது, துப்பாக்கியை பயன்படுத்துவோருக்கு துப்பாக்கி கொண்டுதான் பதில் சொல்ல வேண்டும். வன்முறையை எதிர்கொள்வதில் துளியும் சகிப்புத்தன்மை தேவையில்லை. தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசும் எவருடனும் பேச்சுவார்த்தை அவசியமில்லை. 

கடந்த 8 ஆண்டுகளாக சரணடைவதற்காக மட்டும் நாட்டில் எந்தவித ஆயுதம் ஏந்திய குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. 

காஷ்மீரில் தீவிரவாத  அச்சுறுத்தல், வடகிழக்கு மாநிலங்களில் இனவாத குழுக்களின் மோதல்கள், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்கள் கடந்த 8 ஆண்டுகளில் பெருமளவில் குறைந்துள்ளது. 

மும்பை தீவிரவாத தாக்குதலை தேசம் மறக்க முடியாது. அந்த சம்பவத்தை அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கையாண்ட விதத்தையும் மறக்க முடியாது. 

முதலில் நமது அண்டை நாடுகள் நட்பு நாடுகளா அல்லது எதிரி நாடுகளா என்பதை தெளிவுபடுத்தி உறுதி செய்துகொள்ள வேண்டும்.

நாட்டை வெறும் 10 தீவிரவாதிகள் மிரள வைத்தனர். அந்தத் தாக்குதல் நடந்து 9 மாதங்களில் அப்போதைய பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் ஒரு கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

அதில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவை என்று கூறப்பட்டிருந்து. இதை எப்படி ஏற்க முடியும்?. 

பாகிஸ்தான் நமக்கு நண்பரா, எதிரியா என்பதை தீர்மானித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா, புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாலகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.  நீங்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் என்ற செய்தியை அந்த தாக்குதல் கூறியது. அப்படித்தானே ஒரு அரசு நடந்துகொள்ள வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறினார்.

ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி, நாகாலாந்தின் ஆளுநராக இருந்திருந்த போது, நாகாலாந்தில் அரசுக்கும் என்எஸ்சிஎன் ஐசக் முய்வா குழுக்கள் இடையேயான மோதல்களைத் தீர்க்க அரசு சார்பில் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பங்காற்றியவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com