கர்நாடகத்தில் புணே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்களும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள். அவர் முதல்வராக இருந்தபோது, அவரது 75 ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் மிகப்பெரிய மாநாடு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
சித்தராமையாவின் பிறந்தநாள் மட்டுமின்றி இது கட்சி மாநாடாக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
இதில் சுமார் 6 லட்சம் பேர் வரையில் கலந்துகொள்வார்கள் என திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே இன்று கர்நாடக எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. புணே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை 6 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் இருந்த புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நியாயவிலைக் கடைகளுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய கட்டடங்கள் -மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தாா்

மகளிா் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

