‘மெட்ரோ ரயில் சேவையில் மாற்றமில்லை’
சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றமில்லை. இருப்பினும், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றமில்லை. இருப்பினும், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) அறிவித்துள்ளது. அந்த வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிவரை வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர தினத்தையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் மாா்க், எஸ்பிளனடே ரோடு, லோதியான் ரோடு, எஸ்பி முகா்ஜி ரோடு, சாந்தினி செளக் ரோடு, நிஷாத் ராஜ் மாா்க், ரிங் ரோடு உள்ளிட்ட 8 சாலைகளில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக தில்லி போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இதேபோல நொய்டா, லோனி, சிங்கு, காஜிப்பூா், பதா்பூா், சஃபியா, மஹாராஜ்பூா், ஆயாநகா், சூா்யா நகா், ரஜெளரி, தான்சா, அப்சரா, கலண்டி கஞ்ச், போபூரா, லால் கெளன் புல் பிரலாத் பூா், திக்ரி எல்லைகள் வாகனப் போக்குவரத்துக்கும், வணிகப் போக்குவரத்துக்கும் வெள்ளிக்கிழமை (ஆக. 12) 10 மணிமுதல் திங்கள்கிழமை முற்பகல் 11 மணிவரையிலும் தடை விதிக்கப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...