குஜராத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்தின் புஜ் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், 'குஜராத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இங்கு அரசுப் பள்ளிகளின் நிலை சரியில்லை.
சிறந்த அரசுப் பள்ளிகளை உருவாக்கி தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்குவோம். குஜராத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான இலவச கல்வியை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தருவோம்.
அனைத்து தனியார் பள்ளிகளும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும். எந்தப் பள்ளியும் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கமாட்டோம். பள்ளிகள் அனைத்தும் அனுமதி பெற்ற பின்னரே கட்டணத்தை உயர்த்த முடியும். ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். கற்பித்தல் பணியைத் தவிர வேறு பணிகள் ஆசிரியருக்கு வழங்கப்படமாட்டாது' என்று பேசினார்.
தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் ஆம் ஆத்மி தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


