ரிலையன்ஸ்: தலைமை பொறுப்பேற்கிறார் முகேஷ் அம்பானி மகள்

ரிலையன்ஸ் சில்லறை விற்பனை பிரிவிற்குத் தனது மகள் ஈஷா அம்பானி தலைமையேற்கவுள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 
முகேஷ் அம்பானி / ஈஷா அம்பானி
முகேஷ் அம்பானி / ஈஷா அம்பானி
Published on
Updated on
1 min read

ரிலையன்ஸ் சில்லறை விற்பனை பிரிவிற்குத் தனது மகள் ஈஷா அம்பானி தலைமையேற்கவுள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 

ஜியோ நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆக.29) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், வரும் தீபாவளி பண்டிகை முதல் இந்தியாவின் 4 நகரங்களில் 5ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதனை ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி அறிவித்தார். 

இதேபோன்று அவர் மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டார். ரிலையன்ஸ் சில்லறை வணிகப் பிரிவை (Reliance retail unit) தனது மகள் ஈஷா அம்பானி தலைமையேற்று நடத்துவார் எனத் தெரிவித்தார். 

ஏற்கெனவே ஜியோ நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய முகேஷ் அம்பானி, அதனை தனது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியிடம் கட்நத ஜூன் மாதம் ஒப்படைத்தார். 

அதனைத் தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் சில்லறை வணிகப் பிரிவை தனது மகள் ஈஷா அம்பானியிடம் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து பேசிய முகேஷ் அம்பானி, இளைய தலைமுறையினரிடம் வர்த்தகத்தை ஒப்படைப்பது ஆரோக்கியமான செயல் எனக் குறிப்பிட்டார். மேலும், அடுத்த தலைமுறையை சேர்ந்த தலைவர்கள் நிர்வாகத்தை துடிப்புடனும், நம்பிக்கையுடனும் நிர்வாகத்தை நடத்துவார்கள். 

ஆரம்ப கட்டம் முதலே ஆகாஷும், ஈஷாவும் மிகுந்த உத்வேகத்துடன் வணிகத்தில் கவனம் செலுத்தி வந்தவர்கள். இளைய மகன் ஆனந்த் அம்பானியும் அதிக அளவிலான நேரத்தை ஜாம்நகர் ஆலையிலேயே  செலவிடுகிறார் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com