தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: செப்.13ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம்  செப்டம்பர் 13இல் விசாரிக்கிறது. 

News image

கோப்புப் படம்

Updated On :30 ஆகஸ்ட் 2022, 10:13 am

DIN

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம்  செப்டம்பர் 13இல் விசாரிக்கிறது. 

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில், பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், மத்திய அரசால் 124ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 

அரசியலமைப்பு (சட்டத் திருத்தம்) சட்டம் -2019ன் முதலாவது பிரிவிலுள்ள 2ஆவது துணைப் பிரிவு அளித்துள்ள அதிகாரங்களின்கீழ், அந்த சட்டம் 2019 ஜனவரி 14ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் செப்டம்பர் 13இல் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்க இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.