விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஆகஸ்ட் 2022, 2:14 pm

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகேவுள்ள சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்த கர்நாடக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

சாம்ராஜ்பேட்டை ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கர்நாடக அரசு கடந்த 26ஆம் தேதி அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து வக்ஃபு வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.எம்.சுந்தரேஷ், ஏ.எஸ்.ஓகா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈத்கா மைதானத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு சதுர்த்தி கொண்டாட அனுமதியில்லை என அறிவித்தது. 

இந்த மைதானத்தை இஸ்லாமியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும், மற்ற நேரங்களில் விளையாட்டுத் திடலாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இடைக்கால உத்தரவில் தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

இருப்பினும், மாநில அரசு சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பின்னர், இரண்டு ஏக்கர் நிலத்தில் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.