பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மோர்பி தொகுதி: ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியவர் வெற்றி!

குஜராத் மாநிலத்தின் மோர்பி தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த கான்டிலால் அம்ருதியா வெற்றி பெற்றுள்ளார்

கான்டிலால் அம்ருதியா (கோப்புப் படம்)

Published On :


குஜராத் மாநிலத்தின் மோர்பி தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த கான்டிலால் அம்ருதியா வெற்றி பெற்றுள்ளார். இவர் மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியவர். இந்த விடியோ மோர்பி பால விபத்து காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

குஜராத்தின் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச. 1 மற்றும் 5 எல இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (டிச.8) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

இதில் மோர்பி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக படேல் ஜெயந்திலால், பாஜக வேட்பாளரான கான்டிலால் அம்ருதியா உள்ளிடோர் போட்டியிட்டனர். 

இதில், 62 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று அம்ருதியா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 39 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையே பெற்றார். 

1995, 1998, 2002, 2007, 2012 ஆகிய 5 முறை மோர்பி தொகுதியில் அம்ருதியா வெற்றி பெற்றவர். எனினும் கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அரசியலில் இருந்து மறக்கப்பட்டிருந்த அம்ருதியா, மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அனைவராலும் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மோர்பி பால விபத்து:

மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கட்ந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 7 மாத சீரமைப்புப் பணிகள் முடிந்து அக்டோபர் 26ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் திறக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.