கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேக்கேதாட்டு நடைப்பயணம் பிப் 27ஆம் தேதி மீண்டும் தொடங்கும்: காங்கிரஸ் எம்.பி.

மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸின் இரண்டாம் கட்ட பிப்ரவரி 27 ஆம் தேதி ராமநகரில் மீண்டும் தொடங்கும் என்று அக்கட்சி எம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 2:55 am

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸின் இரண்டாம் கட்ட பிப்ரவரி 27 ஆம் தேதி ராமநகரில் மீண்டும் தொடங்கும் என்று அக்கட்சி எம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார். 

பெங்களூருக்கு குடிநீா் வழங்குவதற்காக காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட வலியுறுத்தி, ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தில் உள்ள மேக்கேதாட்டு பகுதியில் இருந்து ஜன. 9-ஆம் தேதி ‘நமது நீா், நமது உரிமை’ என்ற முழக்கத்துடன் ‘நீருக்காக நடைப்பயணம்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை காங்கிரஸ் கட்சி அண்மையில் மேற்கொண்டது. 

4 நாட்கள் நடைபெற்ற இந்த நடைப்பயணம் கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் பிப்ரவரி 27 ஆம் தேதி ராமநகரில் மீண்டும் தொடங்கும் என்று அக்கட்சி எம்பி சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கெங்கலில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், பெங்களூருவில் ஐந்து நாள் நடைப்பயணம் செல்ல முடிவு செய்துள்ளோம். 

ஆனால் மாநில பட்ஜெட் காரணமாக மூன்று நாள்கள் மட்டுமே நடைப்பயணம் மேற்கொள்ளப்படும். முதல் நாள் நடைப்பயணம் ராமநகரத்திலிருந்து பிடாதி வரையும், இரண்டாவது நாள் பிடாடியிலிருந்து கெங்கேரி வரையும் நடைபெறும். இதில் சித்தராமையா, மல்லிகார்ஜுனா கார்கே, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மாநிலத் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.