/

ஐஐடி குவஹாட்டியில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா: கட்டுப்பாடுகள் தீவிரம்

ஐஐடி குவஹாட்டியில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :5 ஜனவரி 2022, 9:57 am

DIN

ஐஐடி குவஹாட்டியில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 6 நாட்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள்  ஐஐடி வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில், 99 சதவீதம் விடுமுறைக்குச் சொந்த ஊர் சென்று திரும்பியவர்கள் என்று ஐஐடி-குவஹாட்டியின் டீன் பி.ஆர்.பரமேஷ்வர் ஐயர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியதாவது,

தொற்று பாதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். 

விடுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அவசியமின்றி வெளியேறுவது தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மறு அறிவிப்பு வரும் வரை, புதிய மாணவர்கள் யாரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.