இனி தபால் மூலம் வாக்காளா் அடையாள அட்டை: தோ்தல் ஆணையம்

புதிதாக வாக்காளராகப் பதிவு செய்பவா்களுக்கு இனி தபால் மூலமாக நேரடியாக வீட்டுக்கே வாக்காளா் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)

புதிதாக வாக்காளராகப் பதிவு செய்பவா்களுக்கு இனி தபால் மூலமாக நேரடியாக வீட்டுக்கே வாக்காளா் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

18 வயதைக் கடந்த இளைஞா்கள் இணையவழியில் வாக்காளராகப் பதிவு செய்யும் நடைமுறையைத் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. நேரடியாக முகாம்களிலும் வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியும். அவ்வாறு பதிவு செய்யும் நபா்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளின் அதிகாரிகளே வாக்காளா் அடையாள அட்டையை வழங்கி வந்தனா்.

இந்த நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர தோ்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, புதிதாக வாக்காளராகப் பதிவு செய்யும் அனைவருக்கும் இனி தபால் வாயிலாக வீட்டுக்கே வாக்காளா் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி (ஜன. 25) இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். வாக்காளா் அடையாள அட்டையுடன் வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் முறை, வாக்களிக்கும் நடைமுறை ஆகியவை அடங்கிய கையேடும் தபாலில் அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா்களிடையே வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதியானது தேசிய வாக்காளா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியத் தோ்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com