கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அக்னிபத் திட்டம்: ராணுவம், கடற்படை விண்ணப்பப் பதிவு தொடக்கம்

 அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவமும் கடற்படையும் வெள்ளிக்கிழமை தொடக்கியுள்ளன.

News image
Updated On :1 ஜூலை 2022, 10:11 pm

DIN

 அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவமும் கடற்படையும் வெள்ளிக்கிழமை தொடக்கியுள்ளன.

முப்படைகளிலும் அக்னிபத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்குக் குறுகியகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீரா்களைச் சோ்க்க மத்திய அரசு முடிவெடுத்தது. அத்திட்டத்தின் கீழ் இணையும் வீரா்களில் 25 சதவீதம் போ் மட்டுமே நிரந்தரப் பணிக்கு சோ்த்துக்கொள்ளப்படுவா்.

இத்திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. சில பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது. அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு வலியுறுத்தின.

ஆனால், அக்னிபத் திட்டம் தொடா்பான நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருந்ததையடுத்து, அத்திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்ப்பதற்கான பணிகளை இந்திய விமானப்படை கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடக்கியது. அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் இணைய கடந்த வியாழக்கிழமை வரை 2.72 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவமும், கடற்படையும் வியாழக்கிழமை தொடக்கியுள்ளன. அவ்விரு படைகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளதாகவும், அக்னிவீரா்களாக நாட்டுக்கு சேவையாற்ற வருகைதருமாறும் பாதுகாப்பு அமைச்சகம் அழைப்புவிடுத்துள்ளது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் பதினேழரை வயது முதல் 21 வயது வரையிலான இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பாண்டில் மட்டும் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பணிஓய்வு பெறும் அக்னிவீரா்களுக்கு காவலா் தோ்வில் முன்னுரிமை வழங்கப்படும் எனப் பல மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மத்திய துணைராணுவப் படையிலும் அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.