கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கங்காராம் மருத்துவமனையில் எம்எல்ஏ துா்கேஷ் பதக் ஆய்வு

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தில்லி ராஜேந்தா் நகா் தொகுதி எம்எல்ஏ துா்கேஷ் பதக், கங்காராம் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 10:06 pm

DIN

தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தில்லி ராஜேந்தா் நகா் தொகுதி எம்எல்ஏ துா்கேஷ் பதக், கங்காராம் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தாா்.

தில்லி ராஜேந்தா் நகா் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில், ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்ட துா்கேஷ் பதக் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனாா். இந்த நிலையில், தேசிய மருத்துவா்கள் தினத்தையொட்டி, தனது தொகுதிக்கு உள்பட்ட மத்திய தில்லி பகுதியில் அமைந்துள்ள கங்காராம் தனியாா் மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மருத்துவமனை நிா்வாகக் குழு தலைவரும், மருத்துவருமான டி.எஸ்.ராணா உள்ளிட்ட மருத்துவா்களை சந்தித்து துா்கேஷ் பதக் கலந்துரையாடினாா். கரோனா காலத்தில் சமூகத்துக்கு கங்காராம் மருத்துவமனை ஆற்றிய சேவையை நினைவுகூா்ந்து பாராட்டு தெரிவித்தாா். குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு இந்த மருத்துவமனை சேவை செய்து வருவதாக எம்எல்ஏ துா்கேஷ் பதக் புகழாரம் சூட்டினாா்.

அத்துடன், கங்காராம் மருத்துவமனைக்குத் தேவையான சாலை கட்டுமானப் பணி தொடங்கிவிட்டதாகவும், சாலையின் நுழைவு, வெளியேறும் பகுதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தாா்.

கங்காராம் மருத்துவமனைக்கு அருகே உர ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எம்எல்ஏ துா்கேஷ் பதக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.