தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பஞ்சாபில் மூஸேவாலா குடும்பத்தினரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி

பஞ்சாபில் உள்ள  சித்து மூஸேவாலா குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

News image
Updated On :6 ஜூன் 2022, 10:54 am

DIN

பஞ்சாபில் உள்ள  சித்து மூஸேவாலா குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இவர் கடந்த 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மான்சா தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக மூஸேவாலா இருந்தவர் .

இந்நிலையில், மூஸேவாலா கொல்லப்பட்ட அன்று ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தார். அவர் இந்த வார இறுதியில் திரும்பினார். 

எனவே, மூஸேவாலாவின் பெற்றோரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் தலைமையின் சார்பில் ஆறுதல் வழங்க உள்ளதாகவும், அவருடன் பஞ்சாபைச் சேர்ந்த அவரது கட்சித் தலைவர்கள்  வருவார்கள் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் ஏற்கனவே மூஸேவாலாவின் பெற்றோரை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.