5 மாநிலத் தலைவர்களும் ராஜிநாமா செய்யுங்கள்: சோனியா காந்தி
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அந்தந்த மாநிலத் தலைவர்களை ராஜிநாமா செய்யுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.


5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அந்தந்த மாநிலத் தலைவர்களை ராஜிநாமா செய்யுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க | ‘எஸ்.பி. வேலுமணி கிரிப்டோவில் முதலீடு’: லஞ்ச ஒழிப்புத் துறை
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் கட்சி மாநிலத் தலைவர்களை ராஜிநாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளதாக தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். கட்சியை மறுசீரமைப்பு செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...