தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீடு மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமர்சித்திருந்தார். 'படத்திற்கு வரிவிலக்கு எதற்கு? யூ ட்யூபில் வெளியிடுங்கள். அனைவரும் பார்க்கட்டும்' என்று கூறியிருந்தார். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
.jpg)
அப்போது திடீரென தில்லி முதல்வர் கேஜரிவாலின் வீட்டிற்குள் புகுந்து பாஜகவினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 'பாஜகவினர் அரவிந்த் கேஜரிவாலை கொல்ல முற்படுகின்றனர். தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அவரை கொல்வதற்கு முயற்சி செய்கின்றனர்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

