தில்லியில் காற்றுடன் பலத்த மழை
தலைநகர் தில்லியில் பிற்பகலிலிருந்து திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


தலைநகர் தில்லியில் பிற்பகலிலிருந்து திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்லவே முடியாத நிலையில் பலத்த காற்று வீசியது. மழை மற்றும் காற்றுக்கு இடையே சாலைகளில் செல்லும் கார்கள், காற்றின் வேகத்தால் தள்ளாடியபடி செல்லும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.
சூறாவளிக் காற்று போல திடிரென சுழன்றடித்த காற்றினால், சாலைகளிலிருந்து மரங்கள் வேறொடு சாய்ந்தன. இதனால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திடீரென பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் அதிவேகமாக காற்றி வீசியதால், பாதுகாப்புக் கருதி வாகன ஓட்டிகள் சாலையிலேயே ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, நிலைமை சீரடையும் வரை காத்திருக்கும் காட்சிகளையும் காண முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...