நாட்டில் அக்டோபர் மாதம் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக சிஎம்பிசி வெளியிட்டுள்ள தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலையின்மை விகிதம் தொடர்பான தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையின்மை விகிதம் 6.4 சதவிகிதத்திலிருந்து 7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 'அப்படியா?’ துணிவு புதிய அப்டேட்: மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்
குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் 7.8 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், கிராமப்புற பகுதிகளில் 5.8 சதவிகிதத்திலிருந்து 8.04 சதவிகிதமாக அதிகரித்துள்ளதும் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் கடந்த 2021 மற்றும் 2020ஆம் ஆண்டுகளின் அக்டோபர் காலப்பகுதியில் வேலையின்மை விகிதம் 7.7 மற்றும் 7 சதவிகிதங்களாக இருந்தன. இதுவே கடந்த 2019 அக்டோபரில் 8.1 சதவிகிதமாக இருந்தது.
இதையும் படிக்க | என்னதான் ஆனது டிவிட்டருக்கு? பயனாளர்கள் கேள்வி
2022 அக்டோபர் மாதம் நாட்டிலேயே அதிகமான வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன் (31.8 சதவிகிதம்) ஹரியாணா முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் (30.7 சதவிகிதம்), ஜம்மு காஷ்மீர்(22.4 சதவிகிதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல் குறைந்தபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன் (0.8 சதவிகிதம்) மத்தியப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களை சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் பிடித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் தவித்த மமதாவின் விமானம்!

ஐபிஎல் 2026: இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

54 நாடுகளில் டிரெண்டிங்... அசத்தும் மேட் இன் கொரியா!

ஈரான் போர் எதிரொலியா? முட்டை விலை கடும் வீழ்ச்சி!
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

