/

ஹிமாசல் தேர்தல்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்!

ஹிமாசல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ப்ரீத் சிங் ரத்தன் நேற்று பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

News image
Updated On :10 நவம்பர் 2022, 6:07 am

DIN

ஹிமாசல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ப்ரீத் சிங் ரத்தன் நேற்று பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நவம்பா் 12-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-இல் நடைபெற உள்ளது. 

இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஹிமாசலில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வடைகிறது.

Story image

இதனிடையே ஹிமாசல பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஹர்ப்ரீத் சிங் ரத்தன், நேற்று பாஜகவில் இணைந்தார். 

தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் இல்லத்திற்கு வந்த ஹர்ப்ரீத் சிங் ரத்தன், அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். 

Story image

ஹர்ப்ரீத் சிங் ரத்தன், ஹிமாசலில் சிர்மவுர் மாவட்ட பொதுச் செயலாளராக இருந்துள்ளார். மேலும் காங்கிரஸ் சிறுபான்மை முன்னணி அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சமீபமாக காங்கிரஸ் கட்சியினரை விமரிசித்து வந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.