ஜம்மு - காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி பலியானார்கள். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஜம்மு-காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி பலியானார்கள். 

வடக்கு காஷ்மீரின் மச்சில் செக்டாரில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். உடனடியாக சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டு குப்வாரா ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தில் அவர்கள் பலியானார்கள். பலியான வீரர்கள் சவுவிக் ஹஸ்ரா, முகேஷ்குமார், கெய்வாட் மனோஷ் லஷ்மண் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.  இதையடுத்து ராணுவ வீரர்களின் சடலங்கள் ட்ரக்முல்லா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் ராணுவ அதிகாரி மனோஜ் சின்ஹா ​​தனது ட்விட்டரில், “அவர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு தேசம் எப்போதும் கடமைப்பட்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் காஷ்மீர் எல்லையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com