/

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல்: அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

News image
Updated On :5 அக்டோபர் 2022, 7:37 am

DIN

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

ஜம்மு - காஷ்மீர் சிறைத் துறை டிஜிபி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று ஜம்மு, ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டன. 

Story image

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். 

Story image

நேற்று, ரஜோரி மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ நகரில் ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல் குறித்து  அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். 

Story image

ஜம்மு - காஷ்மீரில் அரசியல் நிலவரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.