ஹிமாச்சல் மாநிலம் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2017ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.
247 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,470 கோடிக்கும் அதிகமான செலவில் 18 சிறப்புப் பிரிவுகள், 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்துவைத்துள்ள பிரதமர் மோடி, ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றுகிறார்.
மேலும், குலு பகுதியில் தசரா கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதையும் படிக்க | 4 நகரங்களில் இன்றுமுதல் 5ஜி சேவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

“திமுக கூட்டணியில்தான் குழப்பம்! எங்களிடம் இல்லை!” EPS பேட்டி
போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

இன்று சந்திர கிரகணம்: இதையெல்லாம் கடைப்பிடிக்கலாம்!
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

