கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆந்திரத்தில் 400 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல்

ஆந்திரத்தில் 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :10 அக்டோபர் 2022, 12:26 pm

DIN

ஆந்திரத்தில் 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பீட்டா அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து, பாபட்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் காவல்துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரையும் அவர்கள் கைது செய்தனர். கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்ட விரோதம் என எச்சரித்த அதிகாரிகள், இதை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

ஆந்திரத்தில் இறைச்சிக்காக கழுதைகளை கொல்லும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கழுதை இறைச்சியை உண்டால் வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.