காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இந்திரா காந்தி நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்  நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Published On :

புது தில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்  நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரது சுட்டுரைப் பக்கத்தில், "இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்திக்கு அவரது நினைவு தினத்தில் எனது அஞ்சலிகள். விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவ பலம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது” என்று கார்கே ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், "பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்புகள் இரண்டையும் என் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய உயிரை தியாகம் செய்த இந்தியாவை நான் சிதைக்க அனுமதிக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

Story image

இது குறித்து காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வங்கதேச விடுதலையில் இருந்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவது வரை இந்திரா காந்தி நாட்டை வழி நடத்திச் சென்றார்.

நாட்டின் வளர்ச்சிக்கான அவரது தளராத நெகிழ்ச்சி மற்றும் அசைக்க முடியாத பார்வைக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்" என்று  காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

1984 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவரது சொந்தப் பாதுகாவலர்களில் இருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.