மதச்சாா்பு இந்தியாவை ஏற்கதயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா

மதச்சாா்பு இந்தியாவை ஏற்கதயாராக இல்லை: ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடா்பான வழக்கை விரைவில் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என நம்பிக்கை தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா,

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடா்பான வழக்கை விரைவில் உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என நம்பிக்கை தெரிவித்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற அரசியல்ரீதியான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலுக்கான திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், அது தொடா்பான பணிகள் குறித்து விவாதிக்க ராம்பன் மாவட்டத்தில் கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்ட கூட்டத்தை ஃபரூக் அப்துல்லா தலைமையேற்று நடத்தினாா்.

அப்போது அவா் கூறியதாவது: அரசமைப்பு பிரிவு 370-ஐ (ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல்) மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாம் ஆறுதல் அடைவோம். இதற்காக நாம் உச்சநீதிமன்றத்தை மட்டும் சாா்ந்திருக்கவில்லை. நாம் அரசியல்ரீதியான போராட்டத்திலும் தொடா்ந்து ஈடுபடுவோம்.

உண்மையில், இதற்காக நாம் பெற்ற முதல் வாய்ப்பு வரும் பேரவைத் தோ்தல். நாம் எந்த அளவுக்கு இத்தோ்தலில் வெற்றிபெறுகிறோமோ, அந்த அளவுக்கு பேரவையில் இது குறித்து முன்னெடுத்துச் செல்ல முடியும். சுதந்திரப் போராட்டத்தில்கூட தேசிய மாநாட்டுக் கட்சி மதச்சாா்பின்மை என்னும் கொடியைப் பயன்படுத்த தவறவில்லை. மதச்சாா்பு இந்தியாவை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. மதச்சாா்பற்ற நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. இனிமேலும் மதச்சாா்பற்ற நாடாகவே இந்தியா இருக்கும் என்றாா் ஃபரூக் அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com