முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்போல் வால்ட் தமிழக வீராங்கனைக்கு வெண்கலம்!ஜெம் வீரமணியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்புஞானேஷ் குமார் உருவ பொம்மை எரிப்பு! ஆசிய விளையாட்டில் குண்டு எறிதலில் வெண்கலம்!

என்று மாறும் இந்த நிலை? மகனின் உடலை தோளில் சுமந்துச் சென்ற தந்தை

ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தனது மகனின் உடலை கொட்டும் மழையில் தந்தையே தோளில் சுமந்துச் சென்ற அவலம் நடந்தேறியுள்ளது.

என்று மாறும் இந்த நிலை? மகனின் உடலை தோளில் சுமந்துச் சென்ற தந்தை

Published On :


பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தனது மகனின் உடலை கொட்டும் மழையில் தந்தையே தோளில் சுமந்துச் சென்ற அவலம் நடந்தேறியுள்ளது.

ஸ்வரூப்ரானி நேரு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதால், தனது மகனின் உடலை பல கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்துச் சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஹா கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஷிவன், மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்துவிட்டதால், மருத்துவமனை வளாகத்தில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகக் கட்டணம் கேட்டதால், தந்தை, தனது மகனின் உடலை தோளில் சுமந்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.

செல்லும் வழியில், ஒரு கார் ஓட்டுநர், இந்த தந்தைக்கு உதவ முன் வந்துள்ளார். இதையடுத்து, சிறுவனின் உடலை காரில் எடுத்துச் சென்றுள்ளார். பிறகு திஹா கிராமத்துக்குள் இறங்கி மீண்டும் தனது மகனின் உடலை தோளில் போட்டுக் கொண்டு நடந்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வழக்கம் போல இந்த துயரச்  சம்பவங்கள் எவ்வாறு மாதத்துக்கு ஒரு முறை நடக்கிறதோ, அதுபோல இந்த விடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல வைரலாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.