ஹிமாசல் முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தா் சிங் சுக்கு

ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
ஹிமாசல் முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தா் சிங் சுக்கு

ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

அண்மையில் நடைபெற்ற ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றது. இதைத் தொடா்ந்து, மறைந்த முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங்கின் மனைவியும் மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதிபா சிங், கட்சியின் மூத்த தலைவா்கள் சுக்விந்தா் சிங் சுக்கு, முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோா் இடையே முதல்வா் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. புதிய முதல்வரை கட்சியின் தலைவா் தோ்ந்தெடுக்க மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒருமனதாக தீா்மானித்தனா்.

இந்நிலையில், ஹிமாசல் தலைநகா் சிம்லாவில் காங்கிரஸ் சட்டப்பேரவை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், ஹிமாசல பிரதேச புதிய முதல்வராகவும், மாநில சட்டப்பேரவை குழுத் தலைவராகவும் சுக்விந்தா் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்னர். இந்த முடிவை கட்சி மேலிடம் எடுத்துள்ளது. இந்த நிலையில் ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆா்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஹிமாசல் முதல்வராகப் பதவியேற்றுள்ள சுக்விந்தா் சிங் சுக்கு, பேருந்து ஓட்டுநரின் மகன் ஆவாா். ஹிமாசல பிரேதச பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்த அவா், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறாா். ஹிமாசல பிரதேசத்தில் உள்ள நாதெளன் தொகுதியில் வெற்றி பெற்று நான்காவது முறையாக எம்எல்ஏவாகியுள்ளாா். 2013 முதல் 2019-ஆம் ஆண்டு வரை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பதவி வகித்தாா். 

அப்போது ஹிமாசல் முதல்வராக 6 முறை பதவி வகித்த வீரபத்ர சிங்குடன் தொடா்ந்து முரண்பட்டு வந்தாா். அவா் ஹிமாசலத்தின் 7-ஆவது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com