சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கரோனா விதிகளை பின்பற்றவில்லை எனில்...எச்சரிக்கும் அஸ்ஸாம் அரசு

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதித்தால், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைக்கு 25,000 ரூபாய் அபராதம்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:03 am

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகின்றன. அந்த வகையில், பரவலை தடுக்கும் விதமாக அஸ்ஸாம் அரசும் கரோனா விதிகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 11 மணி தொடங்கவிருந்த இரவு நேர ஊரடங்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 10 மணிக்கு தொடங்கி 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதித்தால், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைக்கு 25,000 ரூபாய் அபராதம் வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில், தடுப்பூசி போடாத பணியாளர்கள் ஜனவரி 15க்குப் பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிய விதிகளின்படி அவர்களுக்கு ஊதியமின்றி விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்சரி, 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படும். 9-12 வகுப்பு மாணவர்களுக்கு கலப்பு வகுப்புகளே தொடரவுள்ளது. அவர்கள் மூன்று நாட்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.