நாட்டில் புதிதாக 1,79,723 பேருக்கு தொற்று: 146 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் புதிதாக 1,79,723 பேருக்கு தொற்று: 146 பேர் பலி


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,79,723. இது கடந்த 227 நாள்களில் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி புதிய மொத்த பாதிப்பு 1,86,364 ஆக பதிவானது. 

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,57,07,727 கோடியாக உயர்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 46,569 
இதுவரை குணமடைந்தோர்: 3,45,00,172.​​​​​​​

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 96.62​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 146. உயிரிழந்தோர் விகிதம் 1.36 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,69,724.

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,23,619 ஆக அதிகரித்துள்ளது, இது சுமார் 204 நாள்களில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மொத்த உயிரிழப்பு 4,83,936 ஆக உயர்ந்துள்ளது,சிகிச்சை பெறுவோரின் விகிதம் 2.03 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,45,00,172 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வழக்கு இறப்பு விகிதம் 1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 13% ஆக உள்ளது. 

பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் கணக்கீடு.

கரோனா தடுப்பூசி:   நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,51,94,05,951 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 29,60,975 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 69,15,75,352 பரிசோதனைகளும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13,52,717 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com