ஊழல்: பஞ்சாப் முன்னாள் அமைச்சருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் 

ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக கைதான பஞ்சாப் முன்னாள் அமைச்சர் விஜய் சிங்லாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 
ஊழல்: பஞ்சாப் முன்னாள் அமைச்சருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் 

ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக கைதான பஞ்சாப் முன்னாள் அமைச்சர் விஜய் சிங்லாவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாபில் சுகாதார அமைச்சராக இருந்த விஜய் சிங்லா தனது துறைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மற்றும் கொள்முதல் பொருள்களுக்கு ஒரு சதவீத தரகுத் தொகை (கமிஷன்) கோரியதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவா் அமைச்சா் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

உடடினாயாக விஜய் சிங்லாவையும், சிறப்பு அதிகாரி பாரதீப் குமாரையும் போலீஸாா் கைது செய்தனா். 

இந்த நிலையில் கைதான விஜய் சிங்லா மொகாலியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. 

அந்தக் கட்சி சாா்பில் மான்சா தொகுதியில் போட்டியிட்டு விஜய் சிங்லா வெற்றி பெற்றாா். தோ்தல் முடிந்த 3 மாதங்களில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, அவரின் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com