பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது அந்நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வேலைநீக்கம் செய்து வருகின்றன. இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க | ஏவுகணை சோதனை: மகளுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர்
இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் பிரபல உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தங்களது பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 3 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “செயல்திறன் மந்தநிலையின் அடிப்படையில் 3 சதவிகித பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். வேறு எதுவும் காரணமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு: பிகார் முன்னிலை
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் தங்களது நிறுவனத்தில் 90 சதவிகிதமான பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. அதேபோல் மெட்டா நிறுவனத்தின் முகநூல் 13 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

