உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்தார் அதானி.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.
இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின.
அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டாலர் (ரூ. 12.40 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 2-வது இடம் பிடித்துள்ளார்.

எலான் மஸ்க்
கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4-வது பெரிய பணக்காரராக இருந்தார்.
அதன் பின், குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
இதையும் படிக்க: ஆளவந்தானா? வாலியா? விமர்சிக்கப்படும் ‘நானே வருவேன்’ டீசர்
போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.38 லட்சம் கோடி) 3-வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4-வது இடத்திலும் உள்ளனர்.

பெர்னார்ட் அர்னால்ட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டாலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5-வது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பட்ஜெட் 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட்- நேரலை

தெரிந்து கொள்வோம்! வெந்தயத்தின் பயன்கள்!

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா? (ஆக. 5)
தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



