சோனாலி போகாட் வழக்கு: கோவா விடுதிக்கு விரைந்தனர் சிபிஐ

சோனாலி போகாட் கடைசியாக தங்கியிருந்த கோவா விடுதிக்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

சோனாலி போகாட் கடைசியாக தங்கியிருந்த கோவா விடுதிக்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். 

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகாட் கொலை வழக்கு சமீபத்தில் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எழுதிய பரிந்துரைக் கடிதத்தை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.

ஆகஸ்ட் 22-ஆம் தேதி கோவா விடுதியில் விருந்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனாலி போகாட் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸாா், சோனாலி போகாட்டுடன் வந்த இரண்டு உதவியாளா்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனா். அவா்கள் சோனாலி போகாட்டுக்கு அன்று இரவு வலுக்கட்டாயமாக போதை மருந்தை அளித்த சிசிடிவி விடியோ பதிவையும் கோவா போலீஸாா் கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வந்தனா்.

செப்.15 முதல் இந்த வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது, சோனாலி போகாட் கடைசியாக தங்கியிருந்த அன்ஜுனா கடற்கரையிலுள்ள கோவா விடுதிக்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com