ம.பி.யில் மினி லாரி - பேருந்து மோதல்: 3 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் புதன்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் மூவர் பலியாகினர்.


மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் புதன்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி மீது தனியார் பேருந்து மோதியதில் மூவர் பலியாகினர்.
லக்னாடோன்-கன்சோர் சாலையில் உள்ள கோயிலுக்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மாநில தலைநகர் போபாலில் இருந்து மாண்ட்லாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மினி டிரக் மீது மோதியது. இதையடுத்து மினி லாரியில் பயணம் செய்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் பேருந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித காயமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது.
உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...