அவள் தில்லி சென்றதே தெரியாது! நாடாளுமன்றத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர்

நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுப்பார் என்றும் அதற்காக பல போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
அவள் தில்லி சென்றதே தெரியாது! நாடாளுமன்றத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர்

அவர் தில்லி சென்றதே தெரியாது என நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே புகைக்குண்டுகளை வீசியதாக கைது செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார். 

அதிகம் படித்த அவர், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுப்பார் என்றும் அதற்காக பல போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருவர் அத்துமீறிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே புகைக் குண்டுகளை வீசிய  பெண்,  நீலம் ஆஸாத் என்று அடையாளம் காணப்பட்டார்.

அவர் ஹரியாணா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததும் அவரின் வீட்டை நோக்கி பலர் திரும்பினர். இது தொடர்பாக நீலம் ஆஸாத்தின் இளைய சகோதரர் பேசியதாவது, 

என் சகோதரி தில்லி சென்றுள்ளார் என்பதே எங்களுக்குத் தெரியாது. அவள் தனது படிப்புக்காக ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் தங்கியிருக்கிறார் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும். இரு நாள்களுக்கு முன்பு அவர் எங்களைக் காண வந்தார். நேற்று மீண்டும் திரும்பிவிட்டார்.

அவர் பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., எம்.பில்., படித்துள்ளார். நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்காக பலமுறை அவர் குரல் கொடுத்துள்ளார். அதோடு விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார். அவர் போராட்டக்குணம் கொண்டவர்தான். ஆனால், அவர் தில்லி சென்றுள்ளார் என்பது இப்போதுதான் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (டிச. 13) வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.

‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை அவையில் வீசினர். அவர்களை மடக்கிப் பிடித்த எம்.பி.க்கள் அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இருவர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் புகைக் குண்டுகளை வீச முயன்றபோது காவல் துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவர் (நீலம், அமோல்) பெண்கள் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com