ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 3 குடிமக்கள் மரணம்: சிபிஎம் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தின் காவலில் இருந்த 3 குடிமக்கள் மரணமடைந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தின் காவலில் இருந்த 3 குடிமக்கள் மரணமடைந்த விவகாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூன்று குடிமக்கள் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால் இது போதாது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, உயிரிழப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தண்டனையற்ற இத்தகைய நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மூன்று நபர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து கிடந்தனர். 

சுரன்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரா கி கலி மற்றும் புப்லியாஸ் இடையே தாத்யார் மோர் என்ற இடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எட்டு பேரில் உயிரிழந்த மூவரும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புப்லியாஸின் டோபா பீர் கிராமத்தைச் சேர்ந்தவர்களான ஷபீர் ஹுசைன் (43), முகமது ஷோகேத் (27) மற்றும் ஷபீர் அகமது (32) ஆகியோர் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்துகிடந்தனர். ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

பூஞ்ச் ​​மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பகுதிக்கு அருகில் இறந்து கிடந்த மூன்று குடிமக்களின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்குவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சனிக்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com